Wednesday, 31 October 2018

DEEPAVALI SPECIAL LADDU

DEEPAVALI SPECIAL BOONDI LADDU. 

Make this Deepavali/Diwali more special with this delicious dessert! A great grand way of expressing your feelings and warm wishes and regards to everyone on the occasion of Diwali/Deepavali. 

How to make this densely rich Boondi Laddus?



Here it is!

Ingredients what we need:

Besan Flour 500g
Sugar 500g
Ghee 20 ml
Refined Groundnut Oil to fry boondis 500 ml
Water  as required
Boiled and cold milk 50 ml
Food colour: Orange 1/2 pinch
Yellow 1/2  pinch
Cucumber seeds 1 Tbsp
Cashew flakes 1 Tbsp
Crushed cardamom seeds 1 Tsp

Procedure:

This  recipe consists of three steps

First Step:

Take 500g besan flour in a mixing bowl.
Add water little by little and blend well 
Add 50 ml boiled cool milk.
Blend well until the batter becomes thin and lump-free.
Set aside for 10 minutes.

Heat the refined oil on medium flame.
Check the temperature of the hot oil by dropping besan batter droplets. If it comes up immediately, the oil is ready to fry the boondis.
Smear both sides of the slotted ladle with little ghee.
Hold the ladle over the hot oil and pour the batter on the ladle. 
Allow the little boondis to fry until the soft texture and not crispy.
Take out the boondis and collect them on oil absorbent tissue papers.
Repeat the process for the remaining batter.
Almost six batches we have to make!

Step 2:

Heat the sugar with 250 ml water to get one string consistency.
Add edible camphor 1/2 pinch, food colours orange and yellow 1/2 pinch each.
Stir well to mix the colours evenly.
Boil the sugar solution on medium heat until one string consistency.
Now transfer the boondis to the sugar syrup.
Fold several times to combine.
Let cook on low heat for a few minutes.

Step 3:

Heat two tbsps ghee in a tempering pan over medium flame.
Add cashew flakes and cucumber dry seeds until golden brown.
Once you add the cashew flakes and cucumber seeds, turn off the heat. The heat of the pan is sufficient to get golden brown contents.
Transfer the fried items to the hot pan containing sweet boondis.
Add Crushed Cardamom seeds and mix well.
Turn off the heat let the sweet boondis sit at rest for 10 minutes.

Now we make the lemon sized balls. 
Almost 30 laddus, we can make out of 500g besan flour.

Happy cooking!
Happy Deepavali!

Cooking Time 45 minutes
Yield: 30 laddus



Find us @ Facebook
Find us @ Instagram
Find us @ Google+
Find us @ Pinterest

Do subscribe, like and share!

தோழமைகளின் விருப்பத்திற்கிணங்கி
தமிழ் செய்முறை பதிவிடப்படுகிறது.

தீபாவளி சிறப்பு லட்டு செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்:

கடலைமாவு  500 கி
சர்க்கரை 500 கி
நெய் 20 மில்லி
காய்ச்சி ஆற வைத்த பால் 50 மில்லி
ரிஃபைன்ட் கடலை எண்ணெய் 500 கி
வெள்ளரி விதைகள் 1 மேசைக் கரண்டி
முந்திரி சீவல்கள் 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் விதைகள் பொடி  1 டீஸ்பூன்
கேசரிப்பவுடர் ஆரஞ்சு கலர் 1 சிட்டிகை
                              மஞ்சள் கலர் 1 சிட்டிகை

செய்முறை:

கடலைமாவைக் கிண்ணத்திலிட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்விட்டு
கட்டிகள் இல்லாமல் கலக்குங்கள்.

பாலையும் சேர்த்து நீர்க்கக் கலக்குங்கள்.


ரீபைன்ட் ஆயிலை வாணலியில் ஊற்றி காய்ச்சுங்கள்.

கலந்த மாவில் ஓரிரு சொட்டை சூடாகிக் கொண்டிருக்கும் ஆயிலில் விடுங்கள். 
உடனே மேலே வந்தால் பூந்தி பொரிக்க சரியான பக்குவம்.

 புந்திக் கரண்டியினை துடைத்து சிறிது நெய்யை இருபக்கமும் தடவி வையுங்கள்.

மிதமான சூடு தொடர்ந்து இருக்கட்டும்.

இப்போது பூந்திக்கரண்டியினை எண்ணெய் மேல் பிடித்தவாறு மாவினை
ஊற்றுங்கள். கரண்டியை மெதுவாக மேலும் கீழும் அசையுங்கள். குட்டிகுட்டியாய் பூந்திகள் எண்ணெயில் பொரிவதைக் கவனியுங்கள். 
சிவக்கப் பொரியக் கூடாது. மென்மையான நிலையில் பூந்திகளை எண்ணெயிலிருந்து கவனமாக எடுத்து
எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தின் (டிஷ்யு பேப்பர்) மேல் வையுங்கள். 
எல்லா மாவினையும் பூந்திகளாகப் பொரித்து விடுங்கள்.

சர்க்கரையுடன் 250 மி.லி  தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
கேசரிப் பவுடர் மேற்கூறிய அளவு சேருங்கள்.
பச்சைக்கற்பூரம் உள்ளங்கையில் அழுத்தி பொடியாக்கி அரை சிட்டிகை சேருங்கள்.
ஒரு கம்பிப்பதம்  வரை சர்க்கரைப்பாகு கொதிக்க வேண்டும்.
ஒரு கரண்டியால் சிறிது சர்க்கரைப்பாகினை எடுத்து விடும்போது கடைசி சொட்டைக் கவனியுங்கள்.
விழும்போது கம்பியாக நீண்டு விழுந்தால்
அதுவே சரியான பதம்.
சூட்டினைக் குறைத்து விடுங்கள்.
பூந்திகளைப் பாகில் சேர்த்து கலக்குங்கள்.
குறைந்த சூட்டினில் இருக்கட்டும்.
பூந்திகள் பாகினை முழுவதும் உறிஞ்சி மிக மென்மையான நிலைக்கு வந்துவிடுகின்றன.
ஒரு சிறிய வாணலியில் 2 மேசைக்கரண்டி கள் நெய்யை இட்டு மிதமா சூட்டில் காய்ச்சுங்கள்.
முந்திரி சீவல்களையும் வெள்ளரி விதைகளையும் இட்டு பொரித்து நெய்யுடன் பூந்திக்கலவையில் சேருங்கள்.
ஏலக்காய் விதைப்பொடியினையும் தூவி கலக்குங்கள்.
சிறிது நேரம் அப்படியே இருக்கட்டும்.

மிதமான சூட்டில் எலுமிச்சை வடிவத்தில்
லட்டுகளாக உருட்டி வையுங்கள்.
சுமார் முப்பது லட்டுக்கள் செய்யலாம்.
சுவையோ சுவை!
நீங்களும் செய்து எல்லோரையும் அசத்துங்கள்.











No comments:

Featured post

IRRESISTIBLE CARROT MASAL STIR FRY

Preparation: 10 minutes Cooking time: 6 minutes Serves: 2  Ingredients: Carrots 8nos  Peanut oil one tablespoon Mustard ...